×

தாய் தந்தை இழந்து 7 சகோதரிகளை வளர்ந்த பெண் - சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு!
 

மன உறுதி கொண்ட ஏழை பெண்ணுக்கு சமந்தா கொடுத்த மிகப்பெரிய பரிசு!
 
 
தாய் தந்தை இழந்து 7 சகோதரிகளை வளர்ந்த பெண் - சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு!

பெரும்பாலான நடிகர், நடிகைகள் படம் நடித்து தாங்கள் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தில் எத்தனையோ ஏழை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். 

அந்தவகையில் நடிகை சமந்தா செய்த காரியம் ஒன்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஆம், சமந்தா நடத்தும் சாம் ஜாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாய் தந்தை இழந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய 7 சகோதரிகளை வளர்ந்து வந்துள்ளார். 

அவர் பட்ட கஷ்டத்தையும், தன்னம்பிக்கையும் கேட்டு பெருமை பாராட்டிய சமந்தா ரூ. 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கி அந்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு பரிசாக வழங்கியுள்ளார். தற்போது அந்த பெண் காரை ஓட்டி குடும்பத்தினரை காப்பாற்றி வருவதாக சமந்தாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News