×

சண்டைக்கு தயாரான சமந்தா, காஜல் அகர்வால் ரசிகர்கள்... விவரம் இதுதான்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் சமந்தா, காஜல் அகர்வால் ஆகிய இருவரும் ஓடிடியில் அறிமுகமாகும் வெப் சீரிஸ்கள் இந்த பிப்ரவரி மாதம் முதல் ஸ்ட்ரீமிங் ஆகவிருக்கின்றன. 
 
 

மனோஜ் பாஜ்பாய் - பிரியாமணி நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டடித்த சீரிஸ் ஃபேமிலி மேன். இந்த சீரிஸின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியிருக்கிறது. பிப்ரவரி 12-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் இந்த சீரியஸில் சமந்தா நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார். இதுவே ஓடிடியில் சமந்தா அறிமுகமாகும் வெப் சீரிஸாகும். இதன் அறிவிப்பு வெளியான போது இந்திய அளவில் டிவிட்டரில் எமோஜி பெற்ற முதல் நடிகை என்ற பெருமையை சமந்தா பெற்றார். 


இதேபோல், காஜல் அகர்வால் நடித்திருக்கும் லைவ் டெலிகாஸ்ட் ஹாரர் வெப் சீரிஸும் பிப்ரவரி முதல் ஸ்ட்ரீமாக இருக்கிறது. இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. கோலிவுட்டின் முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த வெப் சீரிஸ்தான் காஜல் அகர்வாலின் ஓடிடி அறிமுகமாகும். இதனால், சமந்தா, காஜல் அகர்வால் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News