ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய சமந்தா
Apr 29, 2026, 10:18 IST
தென்னிந்திய முன்னணி நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். சமந்தாவின் முதல் படம் மாஸ்கோவின் காவிரி என்றாலும் ரிலீஸ் ஆனது பாணா காத்தாடி. குறுகிய காலத்திலேயே விஜய், விக்ரம், தனுஷ், ஜீவா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் இவர்.
நடிப்பது மட்டுமின்றி தற்போது தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் சமந்தா. இரண்டு படங்களை அவர் தயாரித்துள்ளார். அதில் ஒரு படத்தில் அவரே நாயகியாக நடித்துள்ளார். விரைவில் அப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சமந்த நேற்று தனது 39வது பிறந்த நாளை கொண்டாடினார். மற்ற நடிகைகள் போல் இல்லாமல் சமந்தா இந்த பிறந்த நாளை ரசிகைகளுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரபட்டு வருகிறது.
