Categories: Cinema News latest news

சர்ச்சையில் மட்டும்தான் சிக்குமா இந்த கிளி…! இதோ வெளிவராத சமந்தாவின் இன்னொரு முகம்..

தமிழில் மணிரத்னம் மற்றும் சங்கர் இயக்கிய கடல், ஐ போன்ற படங்களில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது நடிகை சமந்தா. ஆனால் அவரின் சொந்த பிரச்சினையால் நடிக்க முடியாமல் போனது. அந்த நேரத்தில் அவர் கடுமையாக தோல் நோயினால் பாதிக்கப் பட்டு இருந்தார்.

மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். நல்லா உடல் நிலை தேறியதும் மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்த சூழ்நிலைக்கு அப்புறம் ஒரு மருத்துவரின் உதவியோடு தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். தன்னை மாதிரி இனி யாரும் கஷ்டப்பட கூடாது, என் நிலைமை இனி யாருக்கும் வரக் கூடாது என்பதற்க்காக இந்த நிறுவனத்தை ஆரம்பித்து அதன்மூலம் உதவிகளை செய்து வருகிறார்.

குழந்தைகள், பெண்கள் இவர்களுக்காக தேவையான எல்லா உதவிகளையும் இந்த நிறுவனத்தின் மூலம் செய்து வரும் இவர் உயிருக்கு போராடும் குழந்தைகளின் ஆசையை அறிந்து அதையும் செய்து வருகிறார். மேலும் ஆதரவற்ற பெரியோர்களுக்கு கண் அறுவ சிகிச்சை இலவசமாக செய்ய மற்ற மருத்துவமனைகளுக்கு இந்த நிறுவனம் சப்போர்ட் செய்து வருகிறது.

ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி அது மட்டுமே செய்தியாக வந்த நிலையில் தற்போது இவரின் சேவை மனப்பான்மையையும் மக்கள் அறிய இவரது சேவைகள் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini