Categories: latest news

விவாகரத்தை நோக்கி செல்லும் சமந்தா.. ஜீவனாம்சம் இவ்வளவு கோடியா?

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் ‘மாசுகோவின் காவிரி’ என்னும் படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து பானா காத்தாடி, நீ தானே என் பொன்வசந்தம் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம்வந்த இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் சித்தார்த்தை காதலித்தார். இவர்கள் காதல் திருமணத்தில் சென்று முடியும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் இருவரும் பிரிந்துவிட்டனர்.

பின்னர் படங்களில் கவனம் செலுத்திவந்த இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்தார். இந்த காதல் திருமணத்தில் சென்று முடிந்தது. திருமணத்திற்குப் பின்னும் தொடர்நது படங்களில் நடித்துவந்தார் சமந்தா. சமீபகாலமாக சமந்தாவின் விவாகரத்து செய்தி அதிகமாக அடிபடுகிறது.

samantha

சமீபகாலமாக சமந்தா அதிக கவர்ச்சி காட்டி படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோ ஷூட்டும் நடத்துகிறார். இது நாக சைதன்யாவிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். பலமுறை எடுத்துக்கூறியும் சமந்தா கேட்பதாக இல்லை என்கிறார்கள்.

இதையடுத்து நாக சைதன்யா தனது தந்தையுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கவர்ச்சி பிரச்னை பற்றி எரிந்துகொண்டிருக்கும் நேரத்தில் ‘பேமிலி மேன் 2’ வில் அந்தமாதிரி கதாபாத்திரத்தில் நடித்தது நாக சைதன்யா குடும்பத்திற்கு பேரதிர்ச்சியாக இருந்தாம்.

இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்வதில் உறுதியாக உள்ளார்களாம். எப்படியும் இன்னும் 2 மாதத்தில் விவாகரத்து உறுதி என்கிறார்கள். இதற்கு ஜீவானம்சமாக சமந்தா 50 கோடி கேட்டுள்ளாராம்.

adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Published by
adminram