Categories: Cinema News latest news

அடுத்த சான்ஸ் கிடைக்கிற வரைக்கும் இதை வச்சு உருட்ட வேண்டியதுதான்!.. சமந்தா நிலைமை இப்படி ஆகிடுச்சே?

நடிகை சமந்தாவை பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றதே தி ஃபேமிலி இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே தான். இலங்கை தமிழர் கதையாக வெளியான அந்த வெப்சீரிஸ் கடும் சர்ச்சைகளை சந்தித்த நிலையிலும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கடந்த ஆண்டு சமந்தா நடித்த சாகுந்தலம் படுதோல்வியை தழுவிய நிலையில், குஷி படம் சுமாரான வெற்றியை பெற்றது. உடல் நலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையாக மாறிய சமந்தா உடல்நலம் சரியாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: பொங்கல் ரிலீஸ்!.. 500 கோடி வசூலை அள்ளிய டோலிவுட்.. 200 கோடிக்கே முக்கும் கோலிவுட்.. ஆரம்பமே இப்படி?

இந்தி நடிகர் வருண் தவான் நடிப்பில் உருவாகி வரும் சிட்டாடல் வெப்சீரிஸில் சமந்தா தான் ஹீரோயின். பிரியங்கா சோப்ரா நடித்த சிட்டாடல் வெப்சீரிஸின் இந்தியன் வெர்ஷன் தான் இந்த வெப்சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வருடமாக உருவான இந்த வெப்சீரிஸ் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், அதற்கு டப்பிங் பேசியிருக்கிறார் சமந்தா. ஆனால், இன்னமும் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது தான் சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தலைவர்கிட்ட வால் ஆட்டுனா சும்மா விடுவாரா? தொடர் தோல்வி… ரத்னகுமாரின் கேரியர் நிலை என்ன தெரியுமா?

பாலிவுட்டுக்கு சென்று பல ஆண்டுகள் ஆகியும் அங்கே ஒரு படத்தில் கூட நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. டோலிவுட் மற்றும் கோலிவுட்டிலும் சமந்தாவின் உடல்நலம் கருதியே அவருக்கு வாய்ப்புகள் வருவதில்லை என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இந்த வெப்சீரிஸ் ஹிட் அடித்தால் மீண்டும் பழையபடி வாய்ப்புக் கிடைக்கும் என மலைபோல காத்திருக்கிறார் சமந்தா எனக் கூறுகின்றனர்.

Saranya M
Published by
Saranya M