Engal Thangam Box Office : பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் சமந்தா... 10 நாட்களில் 'எங்கள் தங்கம்' செய்த வசூல் இத்தனை கோடியா?
Maa Inti Bangaaram Box Office : 10 நாட்களில் 'எங்கள் தங்கம்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. தமிழில் 'பாணா காத்தாடி' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சமந்தா, தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுடன் டூயட் பாடி ஆடி ரசிகர்களை உருவாக்கி கொண்டார்.
இவர் நடித்து, தயாரித்திருக்கும் புதிய தெலுங்கு படம் தான் 'மா இண்டி பங்காரம்'. இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு 'எங்கள் தங்கம்' என்ற டைட்டிலில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி தியேட்டர்களில் வெளி வந்தது.
சமந்தாவின் கணவரும், பாலிவுட் இயக்குநருமான ராஜ் நிடிமோரு - வசந்த் மரிங்கண்டி - பிரஹாஸ் போப்புடி ஆகியோர் சேர்ந்து இந்த ஆக்ஷன் காமெடி டிராமா ஜானர் படத்துக்கு திரைக்கதை எழுத, பிரபல தெலுங்கு இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியிருக்கிறார்.
இப்படம் சமந்தாவின் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாகியிருக்கிறது. தற்போது, இந்த படம் கடந்த 10 நாட்களில் உலக அளவில் ரூ.78.71 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
