Engal Thangam Box Office : பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் சமந்தா... 'எங்கள் தங்கம்' இத்தனை கோடி வசூலித்துள்ளதா?
Maa Inti Bangaaram Box Office : 11 நாட்களில் 'எங்கள் தங்கம்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஹீரோக்கள் ஆக்ஷனில் மாஸ் காட்டி வருவது போல, ஹீரோயின்களும் ஆசைப்படுகிறார்கள்.
சமீப காலமாக பல ஹீரோயின்ஸ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதை, குறிப்பாக அதில் ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறதா? என்று பார்த்து தான் படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறார்கள்.
அந்த வரிசையில் சமந்தாவும் 'எங்கள் தங்கம்' (தெலுங்கில் 'மா இண்டி பங்காரம்') என்ற ஆக்ஷன் கதையை கேட்டு டிக் அடித்து நடித்திருக்கிறார். அதுவும் இதன் கதை, திரைக்கதையை சமந்தாவுக்கு பக்காவாக பொருந்தும் வகையில் எழுதியிருப்பதே அவருடைய கணவர் ராஜ் நிடிமோரு தான்.
கடந்த ஜூன் 19-ஆம் தேதி வெளியான இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார், இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமந்தாவின் ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த படம் கடந்த 11 நாட்களில் உலக அளவில் ரூ.80.87 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
