Engal Thangam Box Office : பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் சமந்தா... 'எங்கள் தங்கம்' இத்தனை கோடி வசூலித்துள்ளதா?
Maa Inti Bangaaram Box Office : 12 நாட்களில் 'எங்கள் தங்கம்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'பாட்ஷா' பட டெம்ப்ளேட் கதையை பல ஹீரோக்கள் கையில் எடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள், சொதப்பவும் செய்திருக்கிறார்கள்.
அதை சமந்தா 'எங்கள் தங்கம்' (தெலுங்கில் 'மா இண்டி பங்காரம்') படத்தில் கையில் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். முதல் பாதி குடும்ப சென்டிமென்ட் + இரண்டாம் பாதி ஆக்ஷன் சரவெடி என சமந்தா ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்குகிறார்.
சமந்தாவின் கணவராக திகாந்த் மஞ்சாலே நடித்துள்ளார். சமந்தாவுக்கு எதிராக மோதும் வில்லன் கதாபாத்திரத்தில் குல்ஷன் தேவ்வையா நடித்துள்ளார்.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் கெத்து காட்டி வருகிறது. கடந்த 12 நாட்களில் உலக அளவில் ரூ.83.12 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.
