Engal Thangam Box Office : இதுவரை பாக்ஸ் ஆபிஸில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' செய்த வசூல் இத்தனை கோடியா?

 
Engal thangam 13 days collection

Maa Inti Bangaaram Box Office : 13 நாட்களில் 'எங்கள் தங்கம்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. உலகமெங்கும் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் சமந்தா நடித்துள்ள புது படம் தான் 'எங்கள் தங்கம்'.

இப்படம் தமிழ் & தெலுங்கில் (டைட்டில் - 'மா இண்டி பங்காரம்') கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி ரிலீஸானது. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தாவின் காதல் கணவராக திகாந்த் மஞ்சாலே நடித்திருக்கிறார்.

மேலும், வில்லன் வேடத்தில் குல்ஷன் தேவ்வையா நடித்திருக்கிறார். ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் லீ விட்டேக்கர் சமந்தாவுக்காக அமைத்திருக்கும் சண்டை காட்சிகளுக்கு தியேட்டர்களில் விசில் பறக்கிறது.

சமந்தாவே தயாரித்துள்ள இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படம் கடந்த 13 நாட்களில் உலக அளவில் ரூ.85.27 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web