Engal Thangam Box Office : 2 வாரத்தில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' செய்த வசூல் இத்தனை கோடியா?

 
Samantha engal thangam 14 days collection

Maa Inti Bangaaram Box Office : 2 வாரத்தில் 'எங்கள் தங்கம்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஆக்ஷன் காமெடி டிராமா ஜானரில் நடிகை சமந்தா நடித்துள்ள 'எங்கள் தங்கம்' தமிழிலும், தெலுங்கில் 'மா இண்டி பங்காரம்' என்ற பெயரிலும் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக திகாந்த் மஞ்சாலே நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் குல்ஷன் தேவ்வையா, கௌதமி, மஞ்சுசா, ஶ்ரீ லக்ஷ்மி, ரச்சனா சகாதேவா, சைதன்யா கிருஷ்ணா, ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு சமந்தாவின் கணவரும், பாலிவுட் இயக்குநருமான ராஜ் நிடிமோருவுடன் இணைந்து வசந்த் மரிங்கண்டி & பிரஹாஸ் போப்புடி திரைக்கதை எழுதியுள்ளனர், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்துக்கு சமந்தாவின் ரசிகர்கள் கொடுத்து வரும் அமோக வரவேற்பால் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டையாடுகிறது. அதன்படி கடந்த 14 நாட்களில் உலக அளவில் ரூ.86.80 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.

From Around the web