Engal Thangam Box Office : பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் சமந்தா... 3 நாட்களில் 'எங்கள் தங்கம்' செய்த வசூல் இத்தனை கோடியா?

 
Maa inti bangaaram 3 days collection

Maa Inti Bangaaram Box Office : 3 நாட்களில் 'எங்கள் தங்கம்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் தான் 'எங்கள் தங்கம்' (தெலுங்கில் 'மா இண்டி பங்காரம்').

இப்படம் கடந்த ஜூன் 19-ஆம் தேதி உலகமெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது. ஆக்ஷன் டிராமா ஜானர் படமான இதில் குல்ஷன் தேவ்வையா, திகாந்த் மஞ்சாலே, ஸ்ரீமுகி, கௌதமி, ஆனந்த் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ராஜ் நிடிமோரு கதை, திரைக்கதையை எழுதியுள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகை சமந்தாவின் கணவர் தான் ராஜ் நிடிமோரு என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் சேர்ந்து தான் இப்படத்தை தயாரித்துள்ளனர். சமந்தாவின் ரசிகர்களுக்கு ஆக்ஷன் ட்ரீட்டாக அமைந்திருக்கும் 'எங்கள் தங்கம்' கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.41.79 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியிருக்கிறது.

From Around the web