Engal Thangam Box Office : 4 நாட்களில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Updated: Jun 23, 2026, 08:44 IST
Maa Inti Bangaaram Box Office : 4 நாட்களில் 'எங்கள் தங்கம்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. நடிகை சமந்தா நடித்துள்ள புதிய படமான 'எங்கள் தங்கம்' (தெலுங்கில் 'மா இண்டி பங்காரம்') கடந்த ஜூன் 19-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
இதை பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியிருக்கிறார். இதில் முக்கிய ரோல்களில் கௌதமி, ஶ்ரீமுகி, குல்ஷன் தேவ்வையா, திகாந்த் மஞ்சாலே நடித்துள்ளனர்.
ஆக்ஷன் டிராமா ஜானர் படமான இதனை 'Tralala மூவிங் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் சமந்தாவும், அவரது கணவரும், பிரபல பாலிவுட் இயக்குநருமான ராஜ் நிடிமோருவும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் சமந்தாவின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறது. தற்போது, இந்த படம் கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.46.04 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
