Engal Thangam Box Office : 5 நாட்களில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Maa inti bangaaram 5 days collection

Maa Inti Bangaaram Box Office : 5 நாட்களில் 'எங்கள் தங்கம்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகை சமந்தா. 

பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சமந்தா, சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் டிக் அடித்து நடித்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவர் நடித்துள்ள புதிய படம் தான் 'எங்கள் தங்கம்' (தெலுங்கு மொழி டைட்டில் 'மா இண்டி பங்காரம்').

கடந்த ஜூன் 19-ஆம் தேதி ரிலீஸான இந்த படத்தில் சமந்தாவின் நடிப்பு மாஸாக இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இதனை சமந்தாவும், அவரது கணவர் ராஜ் நிடிமோருவும் சேர்ந்து தங்களது 'Tralala மூவிங் பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்கள். தற்போது, இப்படம் கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.51.32 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

From Around the web