Engal Thangam Box Office : 6 நாட்களில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Maa Inti Bangaaram Box Office : 6 நாட்களில் 'எங்கள் தங்கம்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. பொதுவாக ஹீரோக்கள் ஆரம்பத்தில் காதல் படங்களில் நடிக்கத் தொடங்கி, பின் ஆக்ஷன் படங்களில் களமிறங்கி மாஸ் ஹீரோவாக மாறுவார்கள்.
அதே ரூட்டில் இப்போது பல ஹீரோயின்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். கதாநாயகியாக அறிமுகமாகி ஹீரோவுடன் டூயட் பாடி ஆடி வந்த நடிகை சமந்தா ஆக்ஷன் ரூட்டில் பயணித்திருக்கும் படம் தான் 'எங்கள் தங்கம்'.
இப்படம் கடந்த ஜூன் 19-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கிலும் (மா இண்டி பங்காரம்) ரிலீஸ் ஆனது. இதை பிரபல பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார்.
இதில் கதையின் முக்கிய வேடங்களில் குல்ஷன் தேவ்வையா, திகாந்த் மஞ்சாலே, ஸ்ரீமுகி, கௌதமி, ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். தற்போது, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படம் கடந்த 6 நாட்களில் உலக அளவில் ரூ.55.71 கோடி வசூல் செய்துள்ளதாம்.
