Engal Thangam Box Office : ஒரே வாரத்தில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' செய்த வசூல் இத்தனை கோடியா?
Maa Inti Bangaaram Box Office : ஒரு வாரத்தில் 'எங்கள் தங்கம்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. தமிழ் & தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் ஆக்ஷன் காமெடி டிராமா ஜானரில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி வெளிவந்த படம் தான் 'எங்கள் தங்கம்' (தெலுங்கு டைட்டில் 'மா இண்டி பங்காரம்').
இதில் ஹீரோயினாக சமந்தா நடித்துள்ளார். அவருடன் சேர்ந்து கௌதமி, குல்ஷன் தேவ்வையா, மஞ்சுசா, ஶ்ரீ லக்ஷ்மி, திகாந்த் மஞ்சாலே, ஶ்ரீநிவாஸ் கவிரெட்டி, ஸ்ரீமுகி, ரச்சனா சகாதேவா, ஆனந்த், ஜெமினி சுரேஷ் நடித்துள்ளார்கள்.
இந்த படத்துக்கு சமந்தாவின் காதல் கணவரும், ஹிந்தி இயக்குநருமான ராஜ் நிடிமோரு கதை, திரைக்கதையை எழுத, நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இதை சமந்தாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் சமந்தாவின் ஆக்ஷன் காட்சிகள் ஹைலைட்டாக அமைந்து அது படத்தின் வெற்றிக்கு சாதகமாகி விட்டது. தற்போது, இந்த படம் கடந்த ஒரு வாரத்தில் உலக அளவில் ரூ.59.53 கோடி வசூல் செய்திருப்பதாக தண்டோரா போடப்படுகிறது.
