Engal Thangam Box Office : 9 நாட்களில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' செய்த வசூல் இத்தனை கோடியா?
Maa Inti Bangaaram Box Office : 9 நாட்களில் 'எங்கள் தங்கம்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. பிரபல நடிகை சமந்தா நடிப்பில் தெலுங்கு (மா இண்டி பங்காரம்), தமிழ் (எங்கள் தங்கம்) என இரண்டு மொழிகளில் உருவான இப்படம் கடந்த ஜூன் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
உலகமெங்கும் இருக்கும் சமந்தா ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து குல்ஷன் தேவ்வையா, திகாந்த் மஞ்சாலே, கௌதமி, மஞ்சுசா, ஶ்ரீநிவாஸ் கவிரெட்டி, ரச்சனா சகாதேவா, ஜெமினி சுரேஷ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
சமந்தாவும், அவருடைய கணவர் ராஜ் நிடிமோருவும் தயாரித்துள்ள இதை பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி தான் இயக்கியிருக்கிறார். நேற்று முன் தினம் இதன் சக்சஸ் மீட் நடந்தது.
இதற்கு கதை, திரைக்கதையை எழுதிய ராஜ் நிடிமோரு அதில் கலந்து கொண்டு பேசுகையில் "'எங்கள் தங்கம்' படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இதே டீமுடன் சேர்ந்து பார்ட் 2-வை எடுக்க திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார். தற்போது, இந்த படம் கடந்த 9 நாட்களில் உலக அளவில் ரூ.71.57 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
