Engal Thangam Box Office : அடேங்கப்பா இத்தனை கோடியா?... 'எங்கள் தங்கம்' பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை சொன்ன சமந்தா!

 
Engal thangam

Maa Inti Bangaaram Box Office : நடிகை சமந்தா சோலோ ஹீரோயினாக நடித்திருக்கும் 'எங்கள் தங்கம்' படம் (தெலுங்கில் 'மா இண்டி பங்காரம்') கடந்த ஜூன் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதை நந்தினி ரெட்டி இயக்க, குல்ஷன் தேவ்வையா வில்லனாக நடித்திருக்கிறார். சமந்தாவும், அவரது கணவர் ராஜ் நிடிமோருவும் இணைந்து தங்களது 'Tralala மூவிங் பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் முதல் பாதியில் சாந்தமான மருமகள், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் அவதாரம் என சமந்தா வேற லெவலில் மாஸ் காட்டி அசத்தியிருக்கிறார்.

தற்போது, இப்படம் இதுவரை ரூ.96.5 கோடி வசூல் செய்துள்ளதாக சமந்தாவின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் சில நாட்களில் 100 கோடி வசூலித்துவிடும் என்று சொல்லப்படுகிறது. 

From Around the web