Engal Thangam Box Office : அடேங்கப்பா... சமந்தாவின் 'எங்கள் தங்கம்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
Maa Inti Bangaaram Box Office : 'எங்கள் தங்கம்' படத்தின் முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது. 'குஷி' படத்திற்கு பிறகு சமந்தா நடித்த 'எங்கள் தங்கம்' படம் தமிழிலும், தெலுங்கில் 'மா இண்டி பங்காரம்' என்ற பெயரிலும் நேற்று (ஜூன் 19-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
பிரபல பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் கெளதமி, குல்ஷன் தேவ்வையா, திகாந்த் மஞ்சாலே மற்றும் பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் சமந்தாவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இதை அவரே தனது 'Tralala மூவிங் பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மேலும், சமந்தாவின் காதல் கணவரும், பிரபல பாலிவுட் இயக்குநருமான ராஜ் நிடிமோரு தான் இதற்கு கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறார்.
இப்படத்திற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. தற்போது, இந்த படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.10.70 கோடி என்று தகவல் கிடைத்துள்ளது.
