தெலுங்கில் சூப்பர் ஹிட்...தமிழில் பப்படமான சமந்தாவின் எங்கள் தங்கம்

சமந்தா நடிப்பில்  கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான படம் மா இண்டி பங்காரம். சமந்தா , சமந்தாவின் கணவரும்
 
samanatha

சமந்தா நடிப்பில்  கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான படம் மா இண்டி பங்காரம். சமந்தா , சமந்தாவின் கணவரும், பாலிவுட் இயக்குநருமான ராஜ் நிடிமோரு மற்றும் அவரது நண்பர் வசந்த் மரிங்கண்டி - பிரஹாஸ் போப்புடி ஆகியோர் சேர்ந்து தயாரித்துள்ள இந்த ஆக்ஷன் காமெடி டிராமா ஜானர் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியிருக்கிறார்.

படம் வெளியான நாள் முதலே பாசிடிவான விமர்சனங்களே வந்ததை அடுத்து படம்  கலெக்சன் அதிகரித்தது. படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில் இதுவரை ரூ 75 கோடி வசூல ஆனதாக கூறப்படுகிறது.

samanatha

இந்த நிலையில் மா இண்டி பங்காரம் படம் தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் சமந்தாவிற்கு நல்ல மார்க்கெட் உள்ள நிலையில் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் தமிழில் பல தியேட்டர்கள் காற்று வாங்கின. வசூலும் சொல்லிகொள்ளும்படி இல்லை. மொத்ததில் தமிழில் இந்த படம் தோல்வியையே சந்தித்துள்ளது. தமிழில் இது போன்று நிறைய கதைகள் கொண்ட படங்கள் பல வந்துள்ளதால் இந்த படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்று கூறப்படுகிறது. 
 

From Around the web