Categories: Cinema News latest news

இந்த முறை சும்மா இருக்க மாட்டேன்…! தொடர் சர்ச்சைகளினால் கடுப்பான சமந்தா…

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது யசோதா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

ஹிந்தியில் தயாராகும் இந்த படம் மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வரவிருக்கிறது. இதில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த நிலையில் பிஸியாக வலம் வரும் சமந்தாவை பற்றி ஊடகங்கள் சில வதந்திகளை கிளப்பி வருவதாக தெரிகிறது.

இதையும் படிங்கள் : ஓ…இதெல்லாம் நடந்துருக்கான்னு அப்போ தான் தெரிய வரும்….ரஞ்சிதா எதைச் சொல்கிறார்னு பாருங்க..!

அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பதாலும் அதனால் தான் வெளியிடங்களில் அவரை காண இயலவில்லை என்றும் வதந்திகளை பரப்பிவருகின்றனர். இதை பற்றி கேள்விப்பட்ட சமந்தா இந்த முறை பொறுமையை இழந்து யாரெல்லாம் தன்னை பற்றி தேவையில்லாததை எல்லாம் பரப்புகிறார்களோ குறிப்பிட்ட ஊடகங்களை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருப்பதை தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்கள் : வெள்ளை சேலையும் வெள்ளை இடுப்பும் மூட ஏத்துது!…ஷெரினின் ஹாட் கிளிக்ஸ்…

இதே போல் தான் இவரும் நாகசைதன்யாவும் பிரிந்த சமயத்தில் ஜீவனாம்சமாக 250 கோடியை கேட்டதாகவும் வதந்திகளை பரப்பியிருந்தனர். அப்போது பொறுமையுடன் இருந்த சமந்தா இந்த முறை கோபமடைந்து சட்டத்தை நாடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini