தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. இவர் தனது திருமண வாழ்வை முறித்துக்கொண்ட பின்பு பல்வேறு சவாலான கதாபாத்திரங்ளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி எனும் ஆக்சன் – ரொமென்டிக் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் பஹல்கம் எனும் காஷ்மீர் பகுதியில் ஒரு ஆக்சன் காட்சி எடுக்கப்பட்டு வந்துள்ளதாம். அப்போது, ஒரு காரில் இருவரும் இருப்பது போல படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன் – சூர்யாவின் புதிய படம் டிராப்.?! மிகவும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி செய்தி.!
அப்போது தவறுதலாக காருடன் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நீருக்குள் மூழ்கிவிட்டனராம். உடனடியாக இருவரும் படக்குழுவினரால் மீட்கப்பட்டு தற்போது இருவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம். இருவரும் ஓரிரு நாட்கள் பிசியோதரபி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனராம்.
சில நாட்களுக்கு முன்னர் தான் குஷி படத்தில் இருந்து சமந்தா – விஜய் தேவரகொண்டா இருக்கும் ஒரு ரொமேன்டிக் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…