×

90'ஸ் கிட்ஸ் ஃபேவரைட் நடிகருடன் ஜோடி சேர்ந்த சமத்து நடிகை..... 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள சமந்தா தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல இரண்டு காதல் கதை எனும் படத்தில் நடித்து வருகிறார்.
 
Samantha

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள சமந்தா தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல இரண்டு காதல் கதை எனும் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இப்படத்தின் பின்னணி பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Samantha
Samantha

மேலும் ஒரு சில படங்களில் நடித்து வரும் சமந்தா தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் இப்படத்தில் கதையின் நாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக 90களில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு சமயத்தில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுத்த பிரசாந்த் பல வெற்றி படங்களை வழங்கியுள்ளார். வைகாசி பொறந்தாச்சு என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் பிரசாந்த். இதனை தொடர்ந்து இவர் நடித்த ஜோடி, ஜீன்ஸ், பூமகள் ஊர்வலம், கண்ணெதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன், ஆண்ழகன் உள்ளிட்ட அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றன.

Prasanth
Prasanth

தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கிய தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக உச்சம் தொடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இவரது திரை வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக திரையில் தோன்றாமல் இருந்த பிரசாந்த் தற்போது ஹிந்தி ரீமேக் படமான அந்தகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் சமந்தாவிற்கு ஜோடியாக பிரசாந்த் நடிக்க உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News