Engal Thangam Box Office : அடேங்கப்பா... 2 நாட்களில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' செய்த வசூல் இத்தனை கோடியா?

 
maa inti bangaaram 2 days collection

Maa Inti Bangaaram Box Office : 2 நாட்களில் 'எங்கள் தங்கம்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. நடிகை சமந்தா நடித்துள்ள தெலுங்கு படமான 'மா இண்டி பங்காரம்' (தமிழில் 'எங்கள் தங்கம்') நேற்று முன் தினம் (ஜூன் 19-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியிருக்கிறார். இது நடிகை சமந்தா - இயக்குநர் நந்தினி ரெட்டி கூட்டணியில் உருவாகியிருக்கும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவே தயாரித்து, நடித்துள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கெளதமி, குல்ஷன் தேவ்வையா, திகாந்த் மஞ்சாலே, சைதன்யா கிருஷ்ணா, ஸ்ரீமுகி, ஸ்ரீ லக்ஷ்மி, ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த படம் கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.25.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web