அரை சதமடித்த சமந்தா!.. எங்கள் தங்கம்னே கொண்டாடும் ரசிகர்கள்!.. பாக்ஸ் ஆபீஸில் பலே!..
நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில், படம் உலகளவிலான வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "உங்கள் திறன்கள் எத்தகையதாக இருந்தாலும், அவற்றை அதன் எல்லை வரைக்கும், அதற்கும் அப்பாலும் சற்று விரிவுபடுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
கடந்த ஜூன் 19, 2026 அன்று வெளியான 'எங்கள் தங்கம்' தெலுங்கில் மா இன்டி பங்காரம் திரைப்படம், சமந்தாவின் நீண்ட இடைவெளிக்குப் பிறகான திரையரங்கு ரீ-என்ட்ரி படமாக அமைந்துள்ளது. ஆக்ஷன், நகைச்சுவை, குடும்பம் மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்தப் படத்தில் சமந்தா இரட்டை அடையாளங்களைக் கொண்ட ஸ்வர்ணா மற்றும் ஜான்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் வில்லனாக குல்ஷன் தேவையா நடித்துள்ள நிலையில், டிகந்த் மஞ்சாலே, கௌதமி, ஸ்ரீமுகி மற்றும் சைதன்யா கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மேலும், சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Tralala Moving Pictures மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அதனால் இந்த வெற்றி நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சமந்தாவுக்கு முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.
வெளியான முதல் நாளிலேயே உலகளவில் 13 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைக் குவித்த 'எங்கள் தங்கம்', தற்போது 50 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது, சமந்தாவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக மாறியுள்ளது.
