Categories: Cinema News latest news

இத பாக்க இத்தன வருஷம் ஆச்சு!.. ஒரு வழியாக ஃபிரெண்ட்ஸ் ஆன நயன் – சமந்தா…..

பொதுவாக நடிகைகளுக்குள் தொழில் போட்டி காரணமாக நட்பு இருக்கவே இருக்காது. ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தால் கூட ஹாய்… ஹவ் ஆர் யூ அல்லது புன்னகைத்தவாறு ஒரு புகைப்படத்தோடு போய்விடும். இது நடிகர்களுக்கும் பொருந்தும். அதையும் மீறி சில நடிகர், நடிகைகள் நட்பு பாராட்டுவதுண்டு..

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என அழைப்படுபவர் நடிகை நயன்தாரா. ஐயா படத்தில் கொஞ்சன் கொஞ்சமாக முன்னேறி பல வருடங்களாக தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தவர். ஹீரோக்களை நம்பாமல் பெண் கதாபாத்திரம் உள்ள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அதேபோல், தமிழ், தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சமந்தா. இவரும், நயனும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரையும் விஜய் சேதுபதி காதலிப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘காதலுக்கு மரியாதை’ நடிகை லலிதா காலமானார்… திரையுலகினர் இரங்கல்…

 

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய போது நயனும், சமந்தாவும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவே இல்லை என செய்திகள் வெளியானது. ஆனால், படம் முடிவடையும் நிலையில் இருவரும் தோழிகளாக மாறியுள்ளனர். இருவரும் மகிழ்ச்சியாக ஒன்றாக நடந்து வரும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘ special friendship nayanthara’ என சமந்தா குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களில் நயன்தாரா இல்லை. ஆனாலும், அவர் தனது அன்பை உங்கள் எல்லோருக்கும் தெரிவித்தார் என உருகியுள்ளார் சமந்தா…

ரெண்டு பேரும் இப்படியே இருந்தா மகிழ்ச்சி…

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா