Categories: Cinema News latest news

என் விவாகரத்துக்கு இதுதான் காரணம்.! சமந்தா அதிரடி.! தலையை பிய்த்து கொள்ளும் ரசிகர்கள்….

பல்வேறு விவாகரத்து சம்பவங்கள் திரையுலகில் நடைபெற்று இருந்தாலும், தென்னிந்திய சினிமாவில் சற்று அதிர்வலைகளை ஏற்படுத்திய விவாகரத்து என்றால் சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து தான்.

இவர்கள் ஏன் பிரிந்தார்கள், நன்றாக காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் தானே திருமணம் செய்து கொண்டனர் பிறகு ஏன் இப்படி என பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்து கொண்டே இருந்தது.

இந்த கேள்விக்கான விடை தற்போது  கிடைத்துவிட்டது. ஆனால், கிடைக்கவில்லை. புரியவில்லையா? சமந்தா காரணத்தை கூறிவிட்டார். ஆனால், அது வெளியில் தெரியவில்லை.

இதையும் படியுங்களேன்  – நான் உத்தமி கிடையாது.! அதனால் தான் அப்படிபட்ட கதாபாத்திரத்தில் நடித்தேன்.! அதிரவைத்த விக்ரம் நடிகை..

அதாவது, பாலிவுட் சின்ன திரையில் மிகவும் பேமஸ் ஆன நிகழ்ச்சி என்றால் காபி வித் கரண் ஜோகர். இதில் சமந்தா அண்மையில் கலந்துகொண்டார். அதில் தனது விவகாரத்துக்கான காரணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். நான் ஏன் சைதன்யாவை பிரிந்தேன் என கூறியுள்ளார்.

ஆனால், அது டிவியில் ஒளிபரப்பாவது அடுத்த மதமாம். அதனால் சமந்தா அப்படி என்ன காரணம் கூறியிருப்பார் என ரசிகர்கள் தலையை பிய்த்து கொண்டிருக்கின்றனர்.

Manikandan
Published by
Manikandan