நாக சைதன்யாவுடன் நோ பேபி.. ராஜ் நிதிமோருவால் கர்ப்பமான சமந்தா!.. மீண்டும் சினிமாவுக்கு ஓய்வு!..
எங்கள் தங்கம் படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ள நடிகை சமந்தா, சமீபத்தில் அந்த படத்தின் சக்சஸ் மேடையில் பேசிய போது, தான் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தி ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளார்.
இந்நிலையில் சமந்தா "சாரி இன்னும் ஒரு சின்ன இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். இந்த மெட்டர்னிட்டிக்காக என்று கூறியதும், அப்போ அது ரூமர் இல்லை ரியல் தானா என ரசிகர்கள் இன்பதிர்ச்சி அடைந்து விட்டனர். அவர் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படையாக உறுதி செய்துள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள், 4 ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிவை அறிவித்தனர். இந்த விவாகரத்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவருக்கும் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு தனது முழு கவனத்தையும் சினிமா மற்றும் உடல்நல மீட்பில் செலுத்திய சமந்தா, மயோசிடிஸ் நோயிலிருந்து மீண்டு மீண்டும் படங்களில் கவனம் செலுத்தினார். இதற்கிடையில், சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகி வந்தன. அதையடுத்து இயக்குநர் ராஜ் நிதிமோருவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.
முதல் திருமணத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாத சமந்தா இப்போ 2வது திருமணத்தில் கர்ப்பமாக இருப்பது ஏகப்பட்ட கேள்விகளையும் கூடவே எழுப்பியுள்ளது.
