×

சமத்து பொண்ணு....  அம்மாவின் 3ம் திருமணத்திற்கு வனிதா மகள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள்.  இருக்கு இதுவரை இரண்டு திருமணங்கள் நடைபெற்றுவுள்ளது. 2007ம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு 2010ல் பிரிந்துவிட்டார்.

 

அதையடுத்து ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் பிரிந்துவிட்டனர்.  நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்த வனிதா திருமணம் செய்துகொள்போவதாக அறிவித்து பின்னர் பிரிந்துவிட்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது திருமணத்தை செய்யவிருக்கிறார் வனிதா.

ஆம்,  பீட்டர் பவுல் என்பவரை வருகிற ஜூன் 27ம் தேதி கரம் பிடிக்கிறார் வனிதா இதனை தனது சமூக வலைத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ள வனிதா தான் மணக்க போகும் மணமகன் பீட்டர் பால் என்பவரின் புகைப்படத்தையும் அண்மையில் பதிவு செய்திருந்தார் .

இந்நிலையில் வனிதாவின் மூத்த மகள் அம்மா மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப்போவது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில்,   நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். என்ன நடந்தாலும் நான் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்பேன். நான் எல்லாவற்றையும் உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொண்டு இருக்கிறேன். உங்களுடன் இருக்கும் 15 ஆண்டுகளும் தீரம்மிக்கது.

வாழ்க்கையில் பலவற்றை சேர்ந்து பார்த்திருக்கிறோம்.இன்னும் பல ஆண்டுகள் போன்றுதான் வர போகிறது என்பது எனக்கு தெரியும். உங்களை எனக்கு தெரிந்த அளவுக்கு வேறு யாருக்கும் தெரியாது. நீங்கள் அன்பான மனிதர். நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும், அதில் எந்த தவறும் இல்லை.ஐ லவ் யூ, நான் 10000% உங்களுக்கு சப்போர்ட்டாக இருக்கிறேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை, யார் என்ன பேசினாலும் பரவாயில்லை, ஏனெனில் எனக்கு உங்களைப்பற்றி தெரியும். நீங்கள் ஒரு கடின உழைப்பாளி, நேர்மையானவர், அருமையானவர், உற்சாகப்படுத்தக்கூடியவர், இரக்கமானவர், அன்பானவர்.. அதை மறந்துவிடாதீர்கள்.

அனைவரையும் போல நீங்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ தகுதியுள்ளவர். எல்லோருக்கும் நம்பிக்கை இருப்பதில்லை. எல்லோருக்கும் மேஜிக்கில் நம்பிக்கை இருப்பதில்லை. எல்லோருக்கும் காதலிலும் நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால் உங்களுக்கு இருந்தது, அதற்கான பலன் கிடைத்துள்ளது. இதை உங்களின் மகளாகவும் தோழியாகவும் சொல்கிறேன். ஐ லவ் யூ... ஆல் த பெஸ்ட் மா..என்று மிகவும் உணர்ச்சிபூர்வமாக அம்மாவின் புது வாழ்க்கைக்கு ஆதரவு கொடுத்து வாழ்த்தியுள்ளார் மகள் ஜோவிகா.

View this post on Instagram

I'm counting my blessings

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

From around the web

Trending Videos

Tamilnadu News