Categories: Cinema News Gossips latest news

என்னை இரவுகளில் தூங்கவிடாமல் செய்தவர்கள்… சமந்தா வெளியிட்ட அந்த ரகசிய தகவல் இதோ…

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி, அதன் பின்னர், குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் தற்போதும் நீங்க இடம் பிடித்துள்ளார் நடிகை சமந்தா.

பெரும்பாலும், சினிமாவில் இருந்து கொண்டு காதல், திருமணம் , விவாகரத்து என நடந்துவிட்டால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைப்பது கடினம். ஆனால் அதனை எல்லாம் உடைத்தெறிந்தவர் சமந்தா.

விவாகரத்துக்கு பின்னர் தான் தற்போது சென்சேஷனல் நடிகையாக மாறி வருகிறது. இவர் கைவசம் பெரிய பெரிய படங்கள் இருக்கிறதாம். விஜயின் 67வது படத்திற்கு கூட இவரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் –  அம்மா.. நீ அவருடன் டேட்டிங் போ.! அந்த நடிகையை பாடாய் படுத்தும் செல்ல மகள்.!

இவர் இணையத்தில் அதிக நேரம் செலவிடுவாராம். அதிலும், குறிப்பாக ரசிகர்கள் நம்மிடம் இருந்து என்ன மாதிரியான கதைகளை எதிர்பார்க்கிறார்கள் என பார்ப்பாராம். அதிலும், தன்னை பற்றிய ட்ரோல்களையும் சமந்தா பார்ப்பாரம்

அப்படி சமந்தா பற்றிய கொடூரமான பேசுபவர்கள் கமெண்ட்களை அன்று பார்த்துவிட்டால், இரவு தூங்க மாட்டாராம் . அப்படி பல நாட்கள் இந்த மாதிரியான ட்ரோல்களை பார்த்து தூக்கமின்றி இருந்துள்ளாராம் சமந்தா. இதனை அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

Manikandan
Published by
Manikandan