Categories: Cinema News latest news

புண்பட்ட மனசை சமந்தா இப்படித்தான் ஆத்துறாங்களாம்!…லீக்கான போட்டோ…..

தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் பிசியாக வளம் வரும் சமந்தா கடந்த 2017-ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசக்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு தனிப்பட்ட சில காரணங்களால் விவாகரத்து பெறுவதாக இருவரும் அறிவித்தனர்.

விவாகாரத்துக்கு பிறகு சமந்தாவும், நாகசக்தன்யாவும் தங்களுடைய படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துவருகிறார்கள் . சமீபத்தில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா விவாகரத்து குறித்து பேசியுள்ளார் ” இதுகுறித்து நான் எந்த புகாரும் தெரிவிக்க விரும்பவில்லை. ஏனென்றால், இந்த வாழ்க்கையை நான் தான் தேர்ந்தெடுத்தேன்.

எனது வாழ்க்கை குறித்து வெளிப்படையாக எடுத்த முடிவு அது. நாங்கள் பிரியும்போது மன கசப்புடன் தான் பிறந்தோம். அப்போது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. இப்போ நான் வலிமையாக இருக்கிறேன். என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்களேன்- நேற்று நடந்த சம்பவத்தால் கடுப்பான கார்த்தி.. விருமன் ஹீரோ நான் தானே.?!

அவரை தொடர்ந்து நாகசக்தன்யா ஒரு பேட்டியில் விவகாரத்திற்கு பிறகு தன்னுடைய குடும்பத்துடன் பல மணி நேரம் செலவழிப்பதாகவும், நெருங்கி நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது நடிகை சமந்தா மிகவும் சாதாரண உடையில் மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தாவின் கையில் காயப்பட்ட மனதை எப்படி தேர்த்துவது என்பது தொடர்பான புக் வைத்து கொண்டு செல்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் புண்பட்ட மனசை சமந்தா இப்படித்தான் ஆத்துறாங்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Manikandan
Published by
Manikandan