ஓடு ஒடுக்குன்னு ஓடினேன் ஒரு கட்டத்தில் எல்லாம் - சமந்தாவின் புரிதல்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் நடிகை சமந்தா. 39 வயதாகும் நடிகை சமந்தா இன்னும் இளமை குறையாமல் தனது மார்க்கெட் சரிந்து விடாமல் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா பயணம் குறித்தும் அதன் அனுபவம் குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். நான் திரையுலகில் நம்பர் ஒன் இடத்திற்காக ஓடு ஓடு என்று ஓட்டம் பிடித்து ஓடிக் கொண்டிருந்தேன். தனக்கு பிடித்தமான நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதும் அதில் ஆத்ம திருப்தி அடைவதுமே முக்கியம் என்று நான் இதுவரை நினைத்து இருந்தேன்.

இந்த போட்டியில் இறுதிவரை சென்று வெற்றியடைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். காலப்போக்கில் அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. அப்படி ஒரு பந்தயமே இல்லை. நாம் சென்று பிடிக்க வேண்டிய எல்லை கோடு என்பதே இல்லை என்று உணர்ந்து கொண்டேன் என சமந்தா தெரிவித்து இருக்கிறார்.
நடிகை சமந்தா தற்போது "எங்கள் தங்கம்" என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த திரைப்படத்தை தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான தி ஃபேமிலி மேன் தொடர் புகழ் ராஜ் மற்றும் டி.கே கதை உருவாக்கி உள்ளனர் குறிப்பிடத்தக்கது.
