Categories: Cinema News latest news

Samantha: என் Ex-க்கு நான் கொடுத்த காஸ்ட்லியான கிஃப்ட்.. அநாவசிய செலவு பற்றி சமந்தா சொன்ன பதில்

Samantha: தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு , ஹிந்தி என ஒரு பேன் இந்திய நடிகையாக இந்த சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கிறார். என்னதான் லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா இருந்தாலும் அதிக ஃபேன்ஸ் ஃபாலோயர்ஸ்களை வைத்திருக்கும் ஒரே நடிகையாக சமந்தாதான் திகழ்ந்து வருகிறார்.

அதுவும் ரஜினிக்கு எப்படி எல்லா மொழிகளிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்களோ அவருக்கு அடுத்த படியாக சமந்தாவுக்குத்தான் எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்தளவுக்கு தனது க்யூட்டான சிரிப்பாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது சினிமா கெரியர் உச்சத்தை அடைந்த போது நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தார்.

இதையும் படிங்க: ஆழம் தெரியாம காலை விடாதீங்க… ஏ.ஆர்.ரகுமான் நினைச்சா சந்தி சிரிக்க வச்சிருவாரு..!

திருமணமாகி இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருக்க திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாக சைதன்யாவை பிரியப் போவதாக சமந்தா அறிவித்தது ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதிலிருந்தே தன் வாழ்க்கையை தனியாக வாழ ஆரம்பித்தார் சமந்தா. பெரும்பாலும் நாக சைதன்யா சம்பந்தப்பட்ட கேள்விகளை தவிர்த்து வந்தார் சமந்தா.

அந்த அளவுக்கு நாக சைதன்யாவால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார் சமந்தா. ஆனால் நாக சைதன்யாவின் பிரிவுக்கு பிறகுதான் சமந்தாவின் வாழ்க்கையில் ஏறுமுகம் என்று சொல்லலாம். தொடர்ந்து பல படங்களின் வாய்ப்பு என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் சமந்தா. இந்த நிலையில் சமந்தா நடித்த ‘சிட்டாடெல்: ஹனிபனி’ என வெப் சீரிஸ் வெளியாகி இருக்கிறது.

இந்த வெப் சீரிஸில் சமந்தா ரகசிய ஏஜெண்டாகவும் அம்மாவாகவும் நடித்திருக்கிறார். சமந்தாவுடன் வருண் தவானும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சிட்டாடெல்: ஹனிபனி சீரிஸின் புரோமோஷன் நிகழ்ச்சியை அமேசான் பிரைம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் சமந்தாவும் வருண் தவானும் கலந்து கொண்டனர். அப்போது சமந்தாவிடம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேவையில்லாமல் செலவு செய்த பெரும் தொகை எது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

samantha1

இதையும் படிங்க: சிவா என் தம்பி மாதிரி.. எல்லா நேரத்துலயும் கூட இருப்பேன்! சிவகார்த்திகேயனுக்காக உருகிய தனுஷ்

அதற்கு சமந்தா ‘என்னுடைய EX-க்கு நான் விலைமதிப்பற்ற கிஃப்ட் கொடுத்ததுதான்’ என மிகவும் சிரித்து கொண்டே கூறியிருந்தார். ஆனால் சமந்தா பக்கம் பார்க்கும் போது நாக சைதன்யா மீது மிகுந்த நம்பிக்கையும் காதலும் வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அது எல்லாமே பொய்யாகும் பட்சத்தில்தான் சமந்தா அந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டிருக்கிறார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini