சிம்பிளாக நடந்த சமந்தா வளைகாப்பு!.. கணவர் ராஜ் நிடிமோருவுடன் செம ஹேப்பி!..
கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா சோனி விழா டிவியில் ஒளிப்பரப்பாகும் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நிலையில் தற்போது அவரின் வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்து கவனம் பெற்றுள்ளார்.

இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, தற்போது முதல் குழந்தையை வரவேற்கத் தயாராகி வருகிறார். மேலும், கடந்த செப்டம்பர் மாதம் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதற்கிடையே சமிபத்தில் பேபி பம்புடன் புகைப்படத்தைப் பகிர்ந்த சமந்தா, Consider this my maternity shoot என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், கர்ப்பத்தின் ஒன்பதாவது மாதத்திலும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்து 'The final lap' எனப் பதிவிட்டிருந்தார்.

தற்போது ஒன்பதாவது மாதத்தை எட்டியுள்ள சமந்தாவுக்கு டிசம்பர் மாதத்தில் குழந்தை பிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்தப் புதிய பயணத்திற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
