samantha
தமிழ், தெலுங்கு என இரு மொழி சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகை சமந்தா. சில மாதங்களுக்கு முன்பு கணவர் நாக சைத்தன்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். தற்போது பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு, அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் அவர் நடனமாடிய பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் அவரை இந்திய சினிமா அளவில் பிரபலப்படுத்தியுள்ளது.
தமிழை பொறுத்தவரை விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாராவும் மற்றொரு நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபக்கம், ஊர் ஊராக சுற்றுலா சென்று அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது, கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பது என லைம் லைட்டில் இருக்கிறார்.
samantha
இந்நிலையில், இதுவரை தான் நடித்த சில முக்கிய கதாபாத்திரங்களின் புகைப்படத்தை தொகுத்து ‘என் பெயர் சமந்தா ஆனால், என்னை இப்படித்தான் அழைக்கிறார்கள்’ என பதிவிட்டுள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…