ரொம்ப திமிரில் ஆடினேன்... இருண்டுப்போன வாழ்க்கை குறித்து சமந்தா!

 
samantha


தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகை சமந்தா தன்னுடைய கணவரான ராஜ் நிடிமோரு தயாரிப்பில் மா இன்டி பங்காரம் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கொடுத்திருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்து சமந்தாவுக்கு பெரும் லாபத்தை ஈட்டி கொடுத்திருக்கிறது .

தன்னுடைய கடந்த கால வாழ்க்கை குறித்தும் தான் சினிமாவில் அனுபவித்த மிக மோசமான இருண்ட நாட்களை குறித்து பேசி இருக்கும் நடிகை சமந்தா ஒவ்வொரு நாளும் நான் காலையில் எழுந்து கொள்ளும் போது உடலில் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என்றும் நாள் முழுவதும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள போதுமான ஆற்றலும் வலிமையும் கிடைக்க வேண்டும் என்றும் சுவாமியிடம் பிரார்த்தனை செய்து கொள்வேன். 

என்னுடைய திரை பயணத்தில் நான் சந்தித்த புகழும் வெற்றியும் என்னை ஈகோ பிடித்தவளாக ஒரு கட்டத்தில் மாற்றி இருந்தது. அந்த காலம் உண்டு. இதற்கிடையில்  திடீரென பாதிக்கப்பட்ட என் உடல் நலம் வாழ்க்கை குறித்த என்னுடைய பார்வையை அப்படியே மாற்றிவிட்டன .

சினிமாவைப் பொறுத்தவரை உச்சத்தில் இருக்கும் ஒருவர் அடுத்த நாளே அதள பாதாளத்தில் கிடக்கலாம். எனவே நீங்கள் வெற்றி அனுபவிக்கும் போது கடந்து வந்த இருண்ட நாட்களை எப்போதும் மறந்துவிடக்கூடாது. அதுதான் மிக முக்கியம் என நடிகை சமந்தா தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். தற்போது நடிகை சமந்தா நிறைமாத கர்ப்பிணியாக தன்னுடைய புதிய அத்தியாயத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web