×

விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகிய சமந்தா - கர்ப்பம் காரணமா?

விக்னேஷ் இயக்கவுள்ள புதிய திரைப்படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியது தெரியவந்துள்ளது.
 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘நானும் ரவுடிதான்’. இப்படத்தின் 2ம் பாகம் போல் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ எனும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்திலிருந்து திடீரென சமந்தா விலகியுள்ளார். அவர் கர்ப்பமாக இருப்பதுதான் அதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. எனவே, சில வருடங்கள் சமந்தா எந்த திரைப்படங்களிலும் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News