வரும் ஏப்ரல் மாதம் ரிலீசாக விறுவிறுப்பாக தயாராகி வருகிறது தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் , டாக்டர் பட பிரபலங்கள் என பலர் நடித்து உள்ளனர். விரைவில் இப்பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திலிருந்து அனிருத் இசையமைத்து வெளியான அரபிக் குத்து பாடல் தற்போது இணயத்தில் பட்டிதொட்டி எங்கும் வைரலாக பரவி வருகிறது. இப்பாடலுக்கு பலர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். விஜயின் நடன அசைவுகளை பலர் அப்படியே இமிடேட் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்களேன் – இந்த விஷயத்துக்கு எப்படியா விக்ரமை ஒத்துக்க வைத்தீர்கள்.!? இது உண்மையில் நிஜம்தானா.?
இப்பாடலுக்கு முன்னணி நடிகை சமந்தா சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து சூப்பராக நடனமாடி பதிவிட்டார். இந்த ரீல்ஸ் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. தற்போது இந்த ரீல்ஸ் சம்பந்தமாக இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த மாதிரி ரீல்ஸ் செய்ய சொல்லி சமந்தாவிடம் தயாரிப்பு தரப்பு அதிகமாக காசு கொடுத்ததாம், அதனால், தான் சமந்தா இவ்வாறு பதிவிட்டார் என கூறப்படுகிறது. இது போல தான் கீர்த்தி சுரேஷ் போன்ற மற்ற நட்சத்திரங்களும் பதிவிட்டனரா என தெரியவில்லை. உண்மையில் சமந்தா காசு வாங்கினாரா என்பது கூட உறுதியாக தெரியவில்லை. ஆனால், இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…