×

இதெல்லாம் நடிப்பா.. காதலன் மீதான கடுப்பால் சமந்தாவிடம் எகிறிய நயன்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சமந்தாவிடம் நயன்தாரா எகிறிய விவகாரம்தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்.
 
இதெல்லாம் நடிப்பா.. காதலன் மீதான கடுப்பால் சமந்தாவிடம் எகிறிய நயன்!

தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கடந்த சில வருடங்களாகவே லிவிங் டுகெதரில் இருக்கிறார். இப்போ கல்யாணம், அப்போ கல்யாணம் என்று வெளியாகும் தகவல்களை இருவருமே கண்டுகொள்வதில்லை. சென்னையின் பிரதான பகுதியில் உள்ள லக்‌ஷுரி அபார்மெண்டில் நயன்தாராவுக்குச் சொந்தமான வீட்டில் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். 


இந்த ஜோடி புதிதாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிறுவனம் தயாரித்திருக்கும் கூழாங்கல் படம் சர்வதேச அளவில் விருது வென்றது. இந்தநிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிக்கும் `காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஷூட்டிங் பிஸியாக நடந்து கொண்டிருக்கிறது. 


சமந்தா இந்த புராஜக்டில் நடிப்பது குறித்து ஏற்கனவே மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். சமீபத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் ஒன்றாகத் தோன்றும் காட்சிகளை படக்குழுவினர் ஷூட் செய்துகொண்டிருந்திருக்கிறார்கள். ஒரு முக்கியமான சீனில் சமந்தா சிறப்பாக நடிக்கவே, படக்குழு மொத்தமாக கைதட்டி, ஆரவாரம் செய்து அவரைப் பாராட்டியிருக்கிறது. அப்போது அங்கிருந்த நயன்தாரா, இதெல்லாம் ஒரு நடிப்பா... சும்மா இருங்க என படக்குழுவினரை அதட்டியிருக்கிறார்கள். இதனால், சமந்தா அப்செட்டானதாகக் கூறப்படுகிறது. காதலன் விக்னேஷ் சிவன் மீது இருந்த கோபத்தையே நயன்தாரா, ஷூட்டிங் ஸ்பாட்டில் காட்டியதாகச் சொல்கிறார்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News