இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார்: தோழிக்காக களமிறங்கும் சமந்தா!

 

தென்னிந்தியத் திரையுலகில் ஒரு துணிச்சலான நடிகையாகத் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் வரலட்சுமி சரத்குமார். தற்போது அவர் நடிப்பதுடன் மட்டுமல்லாமல், ஒரு புதிய பரிமாணத்தில் களமிறங்கியுள்ளார். முதன்முதலாக ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் அவர். படத்தின் பெயர் சரஸ்வதி.

இந்தத் திரைப்படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படத்தின் தலைப்பு மற்றும் 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டர் நாளை (சனிக்கிழமை) வெளியாக உள்ளது. இந்தச் சிறப்பான வெளியீட்டை வரலட்சுமியின் நெருங்கிய தோழியும், முன்னணி நடிகையுமான சமந்தா ரூத் பிரபு தனது சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக வெளியிடுகிறார்.

இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார்: தோழிக்காக களமிறங்கும் சமந்தா!

இந்தப் படம் ஒரு த்ரில்லர் பாணியில் இருக்கலாம் எனத் தெரிகிறது.

From Around the web