Categories: latest news

25 லட்சம் பணத்தை அலேக்கா தூக்கி சென்ற சமந்தா.. சமந்தா செம ஹேப்பி அண்ணாச்சி!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நடிகை சமந்தா. சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவரான இவர் கடந்த 2010ல் மாஸ்கோவின் காவிரி படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் விஜய், விக்ரம்,சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

இதேபோல் தெலுங்கிலும் பவன் கல்யாண், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து படங்களில் நடித்துவந்த இவர் கடந்தவாரம் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். விவாகரத்துக்குப் பின் ஜீவானம்சமாக நாகசைதன்யா கொடுத்த ரூ 200 கோடியை வேண்டாம் என்று வாங்க மறுத்துவிட்டார் சமந்தா.

இவர்கள் பிரிவிற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், இவர்கள் இருவரும் ஏதும் பேசாமல் அமைதி காத்து வருகின்றனர். தற்போது இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இது தவிர தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் நீங்களும் வெல்லலாம் ஒருகோடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதைப்போல் தெலுங்கிலும் இவரு மீலோ கோடீஸ்வரலு என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது.இந்நிகழ்ச்சியை ஜூனியர் என்.தி.ஆர் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் அவர் ரூ 25 லட்சம் வெற்றி பெற்றுள்ளார். இந்த செய்திதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சமந்தாவிற்கு முன்னதாக ராஜ மௌலி, ராம்சரண் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Published by
adminram