கணவரின் களவாணி வேலைகளை கண்டுபிடிக்கவே இதை செய்கிறேன்... ஓபனாக உடைத்த சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் பல வருடமாக காதலித்து வந்தனர். பின்னர், 2017ம் ஆண்டு கோவாவில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் பிஸி நடிகையாக வலம் வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், சமந்தா பிட்னஸ் விரும்பி. ஜிம் செல்வது, உடற்பயிற்சி செய்வதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுவார். இந்நிலையில், சமந்தா சமீபத்தில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அதில் ஒருவர் நீங்கள் ஏன் ஜிம் செல்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
What Made You to be this Attached to Fitness@Samanthaprabhu2 #SamanthaAkkineni #TheFamilyMan2 pic.twitter.com/OgymgvWrVT
— Deep_Samantha (@Deep_Samantha) January 26, 2021
அதற்கு பதிலளித்த சமந்தா, உங்களிடம் ஒரு பெரிய ரகசியத்தை உடைக்க போகிறேன். சைதன்யாவை செக் செய்யவே நான் ஜிம் சென்றேன். அவர் எப்போதும் ஜிம் செல்வார் அதனால் நானும் சென்றேன் எனச் சிரித்துக்கொண்டே சொல்லி இருக்கிறார்.