×

பணத்திற்காக இப்படியா செய்வது? தொடர்ந்து வெறுப்பை சம்பாதிக்கும் சமந்தா!
 

வித விதமான விளம்பரங்களில் நடித்து கோடிகளில் பணம் பார்க்கும் சமந்தா 
 
 

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே சமந்தா நிறைய விளம்பரங்களில் மாடர்ன் உடைகளை அணிந்துக்கொண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு கவர்ச்சியை வெளிப்படுத்தி நடித்த புகைப்படங்களை வெளியிட்டு குடும்ப ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார். பெடிகிரி , Myntra , Ariel powder உள்ளிட்ட விளம்பரங்களை தொடர்ந்து தற்போது LV Twist பேக் விளம்பரத்தில் படுமோசமான உடை அணிந்து நடித்துள்ளார். உங்களுக்கு ஒண்ணே ஒன்னு சொல்லிக்க விரும்புகிறோம் சமந்தா... "பணம் சம்பாதிக்குறேன்னு உங்களுக்கான ரசிகர்களை மட்டும் விட்டுடாதீங்க".. 

From around the web

Trending Videos

Tamilnadu News