Categories: Cinema News latest news

விவாகரத்துக்குப் பின் வெளியான சமந்தாவின் ப்ரோமோ..!! நிகழ்ச்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்கள்..!

கடந்த ஒரு வாரமாக சமந்தா – நாக சைதன்யா பிரிவு குறித்து அதிகம் கவலைப்பட்டு இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நடிகை சமந்தாவின் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதுவும் தெலுங்கு நடிகர் உடன் இருக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

திரையுலகின் நட்சத்திர ஜோடியாகக் கருதப்பட்டு வந்த சமந்தா – நாக சைதன்யா இருவரும் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிரிவதாக தனித்தனியாக அறிவித்திருந்தனர். இது இரு தரப்பட்ட ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இதனை தொடர்ந்து சமந்தா குறித்த வதந்திகள் பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா “தன்னை பற்றிப் பரவிய தவறான செய்திகள் தன்னை எந்தவிதத்திலும் பாதிக்காது” என குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியின் தெலுங்கு வெர்ஷனில் கலந்து கொண்ட சமந்தாவின் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியைத் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. சமந்தாவின் விவகாரத்து அறிவிப்புக்கு முன் எடுக்கப்பட்ட நிகழ்ச்சி என்பதால் இதைப் பார்க்க சமந்தாவின் ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Published by
adminram