கணவர் கூட சுத்த நேரமே கிடைக்க மாட்டேங்குது... புலம்பும் முன்னணி நடிகை

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, நாகசைதன்யாவுடனான திருமணத்துக்குப் பிறகும் நடிக்கைத் தொடர்ந்து வருகிறார். ஆனால், முன்னர் போல் கிளாமர் வேண்டாம் என முடிவெடுத்திருப்பவர், நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களை செலெக்ட் பண்ணி நடித்து வருகிறார்.
தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் பிஸியாக நடித்து வருபவருக்கு செல்ல பிராணிகள் என்றாலே உயிராம். `அப்செட்டாக இருந்தால் யூடியூபில் நாய்கள் சேட்டை செய்யும் வீடியோவைப் பார்த்து ஃபிரெஷ்ஷாகிவிடுவேன்’ என்கிறார். அதேபோல், சிறுவயது முதலே புத்தகம் படிப்பது மிகவும் பிடித்த விஷயம் என்று சொல்லும் சமந்தாவின் படிப்பு பட்டியல் ரொம்பவே நீளமாம்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் கணவருடன் பொழுதைக் கழிக்கவே விரும்புவதாகச் சொல்லும் சமந்தா, ``என் கணவர்தான் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கார். நேரம் கிடைக்கும்போது அவருடன் இருப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் ஷூட்டிங் முடிச்சு ஃபிரியாகுறப்ப, எனக்கு ஷூட்டிங் தொடங்கிடுது. எது என்னனாலும் என் செல்லப்பிராணியும் என்கூடதான் இருக்கும்’’ என்று சொல்கிறார் சமந்தா. அடிக்கடி சென்னை வந்து பிரெண்ட்ஸைச் சந்திப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறாராம்.