ajith
தமிழ் சினிமாவில் பெரிய பெரிய ஹீரோக்கள் ஒரு பக்கம் தங்கள் மாஸை காட்டி வந்தாலும் சத்தமே இல்லாமல் பெரிய பெரிய ஹிட் படங்களை கொடுத்து தனக்கான ரசிகர் பட்டாளத்துடன் வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரின் படங்கள் மட்டுமோ 100 கோடி கலெக்ஷனை அள்ளும் என்ற நிலையை மாற்றியவர் லாரன்ஸ்.
யாருமே எதிர்பாராத 100 கோடி வசூலை தனது காஞ்சனா படத்தின் மூலம் தந்து சினிமாவை அண்ணாந்து பார்க்க வைத்தவர். இப்போது ருத்ரன் பட புரோமோஷனில் கலந்து கொண்டு வருகிறார். ஏற்கெனவே தனது லைன் அப்பில் சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2, வெற்றிமாறன் கதையில் அதிகாரம் என்ற தலைப்பில் ஒரு படம், லோகேஷ் ஸ்கிரீன்ப்ளேயில் ஒரு படம் என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.
சந்திரமுகி 2 பட வாய்ப்பு வந்ததெல்லாம் கடவுளின் ஆசியால் தான் என்று கூறினார். இதை பற்றி நிரூபர் ஒருவர் ‘ஏற்கெனவே பெரிய வெற்றி கொடுத்த படத்தை மீண்டும் எடுக்கும் போது அதை விட பெரிய வெற்றியை கொடுத்தால் மட்டுமே நமக்கு நல்லது. ரஜினியின் மாஸ் ஹிட் படமான பில்லாவை அஜித் ரீமேக்கில் நடித்தார். அதே போல ரஜினியின் மீண்டும் ஒரு வெற்றிப்படமான சந்திரமுகியில் நீங்கள் நடிக்கிறீர்கள், எதாவது பயம் இருக்கிறதா?’என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த லாரன்ஸ் ‘அதே தான். ஆனால் கடவுள் ஆசி இருக்கு, என் அம்மாவின் ஆசியும் இருக்கு, கண்டிப்பா சரியாக வரும்’ என்று கூறினார். மேலும் எப்படி ஒரே சமயத்தில் டைரக்ஷன், டான்ஸ், நடிப்பு, டிரஸ்ட் என கவனித்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு வித்தியாசமான ஆச்சரியமான பதிலை அளித்தார் லாரன்ஸ்.
டிரஸ்ட் தான் பெரிய கனவு என்றும், சில சமயங்கள் படப்பிடிப்பில் இருக்கும் போதே வேறொரு ஊரில் இருக்கும் குழந்தைக்கு திடீரென இரத்த வாந்தி, இதயத்தில் கோளாறு என்று போன் வரும். அப்போது இயக்குனரிடம் நம்ம சொந்த விஷயங்களை சொல்லிவிட்டு வரமுடியாது. அதனால் இடைவேளை இருக்கும் போது அந்த குழந்தைக்கு தேவையான மருத்துவரிடம் போனில் அழைத்து தேவையான மருத்துவ உதவிகளை வழங்க சொல்லுவேன்,
மேலும் மருத்துவரையும் நம்ம இஷ்டத்திற்கு வரவழைக்க கூடாது, அந்தக் குழந்தைக்கு தேவைப்படுகிற மருத்துவர் யார், ஊரில் எந்த மருத்துவன் பெஸ்ட் என்பதை ஆராய்ந்து தான் வரசொல்லுவேன், அப்போது தான் அந்த குழந்தையை காப்பாற்ற முடியும். எல்லாம் முடிந்து அந்த குழந்தையின் பெற்றோர்கள் என்னை போனில் அழைத்து ரொம்ப நன்றி என்று சொல்வார்கள். அப்போது தான் நாம் ரியல் ஹீரோ என்பதை உணர்வேன், படத்தில் இருக்கிறதெல்லாம் ரீல் ஹீரோ என்று மெய்சிலிர்க்கிற அளவுக்கு பதிலை அளித்தார் லாரன்ஸ்.
இதையும் படிங்க : ஆம்பள மாறி இருக்காயா?.. படப்பிடிப்பில் கவுண்டமணி கிண்டலடித்த அந்த நடிகை யாருனு தெரியுமா?….
Vijay Devarakonda:…
Kantara Chapter…
STR49 :…
TVK Vijay:…
Vijay: தமிழ்…