Connect with us

Cinema News

20 வருட இடைவெளியில் ஒரே கதை அம்சத்துடன் வந்த இருபடங்கள்…! ரெண்டுமே மெகா ஹிட் தான்..!

ஒரே மாதிரியான இருபடங்கள் தமிழ் சினிமாவுக்கு வருவது புதுசல்ல. இங்கு 20 வருட இடைவெளியில் வந்துள்ளன. அப்படிப்பட்ட 2 படங்கள் பற்றி பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…

நான் இயற்கையை எல்லா சூழ்நிலையிலும் ரசிப்பவன். வெளிப்புறப்படப்படிப்புக்காக காடுமேடு என எங்கு சென்றாலும், யாருக்கும் தெரியாமல் வெளியே போய் விடுவேன். பேய்களைப் பார்க்கச் சுடுகாடு, காட்டுப்பகுதி, காளி கோவில் என்று சென்றதுண்டு.

பேய்கள் என்னவோ என்னைக் கண்டு பயந்து அருகில் நெருங்கியதில்லை. அந்தச் சுடுகாட்டு நெடி தவளைகளின் சப்தம், விட்டில்களின் ஓசை, நரிகளின் கூப்பாடு, ஏன் சிறுத்தைகளின் கனைப்புச் சத்தம் எல்லாம் கேட்டு இருக்கிறேன்.

பைலட் பிரேம் நாத் படப்பிடிப்புக்காக சிலோனுக்குச் சென்றிருந்தேன். அப்போது சாயங்கால நேரம். கண்டியைத் தாண்டி இருந்த ஊரில் ஒரு அழகிய நதி ஓடிக்கொண்டிருந்தது. அமர்ந்து பார்க்க ஆற்றோரம் இருக்கைகளும் இருந்தன.

நானும் மற்றொரு இயற்கை பிரியர் டான்ஸ் டைரக்டர் சோப்ராவும் தனிமையை நாடி அங்கு சென்று ஆற்றோரமாக அமர்ந்தோம். அந்த ஆற்றின் நீரையே மறைத்த படி ஆயிரம் ஆயிரம் செந்நிற நாரைகள் ஒற்றைக் கால்களில் நின்று மீன் பிடித்துக் கொண்டிருந்தன.

Flemingo

அப்படியே நீல நிற ஆற்றின்மீது ரோஸ் நிறப் போர்வையைப் போர்த்தியது போல் இருந்தது கண்கொள்ளாக் காட்சி. ஆனால் அதை விட அற்புதம் மேலே ஆகாயத்தில் நடந்து கொண்டு இருந்தது. சூரியன் அஸ்தமனமாவதற்கு முன் வானில் வர்ணஜாலங்கள் வித்தை காட்டின.

சூரியனும், கதிர்களும் ஆகாயமும், பச்சை நிறமாக மாறியது. இந்தச் சூரியனின் பச்சை நிற மாற்றத்தை ஆங்கிலத்தில் கிரீன் சன்செட் அதாவது பச்சை சூரிய அஸ்தமனம் என்பர். அப்போது அங்குள்ள ரோஸ்நிற நாரைகள்…பச்சை கலந்த ரோஜாப்பூ நிற நாரைகளானது. சிறிது நேரத்தில் அந்தக்காட்சி மறைந்து இருள் சூழ ஆரம்பித்தது.

Seran

20 வருட இடைவெளியில் ஒரே மாதிரியான கதை அம்சத்துடன் வந்த படங்கள் 2. அவற்றில் ஒன்று டி.ராஜேந்தரின் ஒரு தலை ராகம். மற்றொன்று சேரனின் ஆட்டோகிராப். இந்தப் படங்கள் ஒரே மாதிரியான மையக்கருத்தைக் கொண்ட வெற்றிப்படங்கள்.

ஒரு தலை ராகம், இளைஞர்களின் டீன் ஏஜ் பிரிவின் கொடுமையை விளக்கியது. வாலிபக்கனவுகளை வெளிப்படுத்தியது. ஒரே காலத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும், ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்து படிக்கும்போது ஏற்படும் அனுபவங்களை அப்படியே நம் கண்முன் நிறுத்தினார் டி.ராஜேந்தர்.

Oruthalai ragam

அழகான அர்த்தம் பொருந்திய புதுக்கவிதை வசனங்களும் படத்தின் வெற்றிக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். பாடல்களும் கதைக்கேற்ப கச்சிதமாகப் பொருந்தின.

சேரனின் ஆட்டோகிராப் சிறுவயது அன்பு, ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள், ஆண்கள், பெண்கள் என எல்லோரையும் கவர்ந்தது.

Continue Reading

More in Cinema News

To Top