×

மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய சமீரா ரெட்டி - வாழ்த்து மழையில் பேபி நைரா

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.

 

பிறகு திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். அதையடுத்து கடந்த வருடம் ஜூலை 12ம் தேதி நைரா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததில் இருந்தே வீட்டில் ஓய்வெடுத்து,  குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் சமீரா ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.

இந்நிலையில் தற்ப்போது நைராவின் முதல் பிறந்தநாளை இந்த கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்தபடியே சிம்பிளாக கேக் வெட்டி கொண்டாடிய அழகிய வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.  நைராவுக்கு அம்மாவின் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News