×

கிறிஸ்துமஸ் கேக் செய்து அசத்திய சமீரா ரெட்டியின் மகன் - வீடியோ! 
 

சமீரா ரெட்டி மகனுடன் சேர்ந்து கேக் செய்து அசத்தியுள்ளர் 
 
 

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை  திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.பிறகு திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். அதையடுத்து கடந்த வருடம் ஜூலை 12ம் தேதி நைரா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. 

குழந்தை பிறந்ததில் இருந்தே வீட்டில் ஓய்வெடுத்து,  குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் சமீரா ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார். இந்நிலையில் தற்போது தனது மகனுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கேக் செய்து அசத்திய வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

 


 

From around the web

Trending Videos

Tamilnadu News