×

அத்தியாவசிய தேவைகள் கூட இல்லை.. தூக்கமின்றி தவிக்கிறோம்.. சமீரா ரெட்டி

வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி கோவாவில் வசித்து வருகிறார். கோவா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட இடங்களில் தக்தே புயல் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. 

இந்நிலையில் கரண்ட் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கூட இல்லாமல் தக்தே செய்துள்ளதை குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராமில் சமீரா ரெட்டி பதிவிட்டுள்ளார்.

வாரணம் ஆயிரம் படத்தில் அழகு தேவதையாக வந்து பாதியிலேயே காணாமல் போவார் சமீரா ரெட்டி. தொடர்ந்து தமிழில் மூன்று படங்களில் நடித்துவிட்டு இன்டஸ்ட்ரீயில் இருந்தும் காணாமல் போனார். தற்போது கோவாவில் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் சமீரா.

கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தக்தே புயல் கோர தாண்டவம் ஆடியுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகள்கூட இல்லாமல் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமீரா ரெட்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மழையும் அதிகமாக உள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகமான காற்றால் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவை பழுதடைந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கரண்ட் இல்லாமல் சில தினங்களாக அவதியுற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவரது பெட் டாக் டாமி மிகவும் பயந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News